சுவாதியை நான் மட்டும் தான் கொலை செய்தேன் : ராம்குமார்!!

551

Swathi Murder

ராம்குமாரின் பொலிஸ் காவல் முடிந்ததை தொடர்ந்து நேற்று மாலை 4.30 மணியளவில் மூர் மார்க்கெட் அல்லிக்குளத்தில் செயல்படும் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்துக்கு ராம்குமாரை பொலிசார் அழைத்து சென்றனர்.

நீதிபதி கோபிநாத் முன்பு அவரை ஆஜர்படுத்திய பின்னர், பொலிஸ் காவலில் ராம்குமார் அளித்த வாக்குமூலத்தை நீதிபதியிடம் பொலிசார் சமர்ப்பித்தனர்.

வீடியோ எடுக்கப்பட்ட ராம்குமாரின் வாக்குமூலத்தின் சிடி, நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது, சுமார் அரை மணி நேரம் நீதிபதி கோபிநாத் தனியாக விசாரணை நடத்தினார்.

பொலிஸ் காவலில் ராம்குமாரிடம் சுவாதியுடன் பழக்கம் ஏற்பட்டது எப்படி? அவரை கொலை செய்வதற்கு வேறு யாராவது உதவி செய்தார்களா? போன்ற பல கேள்விகளை பொலிசார் கேட்டுள்ளனர். “எனது காதலை நிராகரித்ததாலும், என்னையும் எனது குடும்பத்தையும் சுவாதி தவறாக பேசியதாலும்தான் அவரை வெட்டினேன்.

நான் மட்டுமே தனியாக முடிவு செய்து இந்த கொலையை செய்தேன். இந்த கொலைக்கும் வேறு யாருக்கும் தொடர்பில்லை” என்று ராம்குமார் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சுவாதி அலுவலகம் மற்றும் வீட்டில் பயன்படுத்திய லப்டப், பிரின்டர், செல்போன் ஆகியவற்றில் உள்ள தகவல்களை பெறுவதற்காக ஐதராபாத்தில் உள்ள ஆய்வுக் கூடத் துக்கு பொலிசார் அனுப்பியுள்ளனர்.

அதில் என்னென்ன தகவல்கள் கிடைத்தன என்பதை பொலிசார் இதுவரை வெளியிடவில்லை. “சுவாதி கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து அவரது செல்போனையும் கொலையாளி எடுத்து சென்றார். எனவே, யாருக்கோ தேவையான ஒரு தகவல் சுவாதிக்கு தெரிந்துள்ளது.

அதை அவர் தனது லப்டப்பில் வைத்து இருந்திருக்கலாம். அந்த தகவல் வெளியே தெரியாமல் இருக்க சுவாதியை கொலை செய்ய முடிவு செய்து, அதற்கு ராம்குமாரை பயன்படுத்தி இருக்கலாம்.

சுவாதியை கொலை செய்வதற்கு முன்பு 20, 21 ஆகிய திகதிகளில் ராம்குமார் ஆந்திர மாநிலம் சென்று வந்திருக்கிறார். இந்த கொலை சம்பவத்தில் ராம்குமார் ஒரு அம்பாக மட்டுமே செயல்பட்டு இருக்கிறார். அவரை எய்த வில் வேறு எங்கோ உள்ளது” என்று சில சந்தேகங்களும் எழுந்துள்ளன.