அவ்வப்போது கண்ணீர் விட்டு அழும் நபர்களா நீங்கள் உங்கள் கைகளைக் கொடுங்கள். அழுகை நல்லது என்றே ஆராய்ச்சிகள் கூறுகிறது. நம்முடைய நரம்பு மண்டலத்திலுள்ள பாராசிம்பதட்டிக் சிஸ்டம் அழுகையின் போது அசைக்கப்படுகிறது.
இந்த சிஸ்டம் அசைக்கப்ட்டாலே நமக்கு அமைதி (Relaxation) கிடைக்கும். அதாவது நிம்மதியைத் தருன்கிற, மன அழுத்தத்தைக் குறைக்கிற நரம்புகளை உணர்ச்சி தட்டி எழுப்பும். தொடர்ந்து OPIODS என்கிற இரசாயன வஸ்துவை நமது கண்ணீர் தட்டி எழுப்புகிறது.
மேலும் நம்முடைய சந்தோஷத்தைத் தூண்டுகிற இயற்கை இரசாயனங்களையும் சுரக்கவைக்கிறது. மற்றும் ஆக்ஸிடாசின் (Oxitocin) என்ற ஹார்மோனை கண்ணீரானது சுரக்க வைக்கிறது.
இது நம்பிக்கை ஊட்டும் அல்லது சந்தோஷத்தை தரும் நரம்பு மண்டலத்தை தூண்டுகிறது. இதெல்லாம் மருத்துவரீதியான நன்மைகள். ஆகையினால்தான் அழுகைக்குப் பிறகு ஒரு பெரிய விடுதலை உணர்வு, பிரச்சினையிலிருந்து வெளிவந்த உணர்வு கிடைக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக அழுகை நாம் நினைத்த காரியத்தை சாதிக்க வைக்கின்றது பார்த்தீர்களா..
அது பெரிய விடயமா இல்லையா? அவ்வப்போது சிந்தும் கண்ணீருக்கு இவ்வளவு நன்மைகள் இருக்குது. ஆனால் அடிக்கடி அழுபவர்களுக்கு உடல் ரீதியான சில பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் சக்தி வீணாகி பலவீனமடையவும் வாய்ப்புண்டு.
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா?
இதற்கு காரணம் ஆண்களை விட பெண்களின் இளகிய மனம் தான். மனதளவில் ஆண்களை விட பெண்கள் மிகவும் மென்மையானவர்கள். சின்ன, சின்ன பிரிவுகள் மற்றும் உணர்ச்சி ரீதியான விஷயங்களுக்கு கூட பெண்கள் அழுதுவிடுகின்றனர்.
ஆண், பெண் கண்ணீர் ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக கண்ணீர் சிந்துகின்றனர். மேலும், சராசரியாக ஒரு ஆண் அழும் நேரம் 5 நிமிடத்திற்கும் குறைவு. ஆனால், பெண்கள் அழும் நேரம் 15-24 நிமிடங்கள் ஆகும்.