23 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் : இந்தியாவை 28 ரன்களில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான்!!

304

afghanistan-cricket

23 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாதனை படைத்திருக்கிறது.

சிங்கப்பூரில் 23 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்த போட்டியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதின. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை எடுத்தது.

பின்னர் ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்களையே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சரித்திரம் படைத்தது ஆப்கானிஸ்தான்.

இப்போட்டி தொடரில் இந்தியாவுக்கு இது முதல் தோல்வி. இருப்பினும் புள்ளிகள் அடிப்படையில் இந்தியா முன்னணி பெற்றிருக்கிறது. ஏற்கெனவே பாகிஸ்தான், நேபாளம் அணிகளை இந்தியா வெற்றிபெற்றுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை நாளை இந்தியா அரை இறுதியில் எதிர்கொள்கிறது. இதேபோல் பாகிஸ்தானும் இலங்கையும் பலப்பரீட்சை நடத்துகின்றன. வரும் 25ம் திகதியன்று இறுதிப் போட்டி நடைபெறுகிறது.