தமிழ்-சிங்கள மாணவர்களின் மோதலையடுத்து யாழ்.பல்கலைக் கழக விஞ்ஞானபீடம் மூடப்பட்டது!!

862

3-19

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட புகுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில்மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற மோதலையடுத்து விஞ்ஞான பீடம் காலவரையறையற்றவகையில் மூடப்பட்டுள்ளது.

இத்தகவலை யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் திருமதி வசந்தி அரசரட்ணம் கூறியுள்ளார். மேற்படி விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

மோதல் நிலையை அடு த்துவிஞ்ஞான பீடம் காலவரையறை இல்லாமல் மூடப்பட்டுள்ளது. மேலும் விடுதிகளில் உள்ளவிஞ்ஞான பீட சிங்கள மாணவர்கள் விடுதிகளை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டுசம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் அவர்கூறியுள்ளார்.

1 2 3 4 5 6 7 8