திகார் சிறையில் பவர்ஸ்டார் : ஜாமீன் கிடைப்பதில் சிக்கல்..!!

330

power

வேலூர் சிறை அதிகாரிகள் நன்னடத்தை சான்று வழங்காததால் நடிகர் சீனிவாசன் டெல்லி திகார் சிறையில் இருந்து, ஜாமினில் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் ஓங்கோலைச் சேர்ந்த தொழில் ஓட்டல் அதிபர் ரங்கநாதனிடம் 50 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்ட நடிகர் சீனிவாசன் வாங்கிய கடனை கொடுக்காமல் ஏமாற்றியதால் கடந்த ஏப்ரல் 26ம் திகதி வேலூர் சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக, டெல்லியை சேர்ந்த தொழில் அதிபரிடம் ஐந்து கோடி ரூபாய் மோசடி செய்த நடிகர் சீனிவாசனை, டெல்லி போலீசார் கடந்த ஜூன், 4ம் திகதி அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கு கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைத்தனர்

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் பதிவு செய்யப்பட்ட ஆறு வழக்குகளில் இருந்து ஜாமினில் விடுவிக்க, பிணயத் தொகை செலுத்தி உள்ளனர். இந்த ஆவணங்கள், டெல்லி போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

டெல்லி வழக்கிலும், ஜாமின் பெற முயற்சி நடக்கிறது. வேலூர் சிறையில் இருந்த போது, அவருக்கு நன்னடத்தை சான்றிதழ் வழங்கினால் தான் திகார் சிறையில் ஜாமின் கிடைக்கும்.

இதனால் வேலூர் சிறையில் நன்னடத்தை சான்றிதழ் வாங்க முயற்சி நடந்தது. சிறை அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனால், திகார் சிறையில் இருந்து பவர்ஸ்டார் சீனிவாசன் வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பவருக்கு ஜாமீன் கிடைக்கும அல்லது திகார் சிறை வாழ்க்கை 100 நாட்களை தாண்டிவிடுமா என்பது வேலூர் அதிகாரிகளின் கைகளில்தான் உள்ளது என்கின்றனர் அவரது ரசிகர்கள்.