வவுனியாவில் நேற்று (16.07.2016) காலை 11 மணியளவில் மகாறம்பைக்குளம் பகுதியில் ஒரு கிலோ கேரள கஞ்சாவுடன் 28 வயது சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக போதை ஒழிப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
கிளிநொச்சிப் பகுதியிலிருந்து வவுனியாவிற்கு பொதி செய்யப்பட்டு ஒரு கிலோ கேரள கஞ்சாவினை விற்பனை செய்வதற்காக எடுத்து வரப்பட்ட நிலையில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது குறித்த கஞ்சா விற்பனை செய்யும் சந்தேக நபரையும் கேரளா கஞ்சா பொதியினையும் கைது செய்து மாமடு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் போதை ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மாமடு பொலிசாரின் விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் மாமடு பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.






