உடல் எடையை குறைக்க உதவும் தண்ணீர்!!

396

Beautiful attractive young sweaty woman drinking water after exercise workout, rehydrating thirst quenching, isolated.

நாம் குடிக்கும் தண்ணீருக்கு உடல் எடை அதிகரிப்புடன் போராடும் ஆற்றல் உள்ளதென ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது. ஆய்வின்படி குடி தண்ணீர் மாப்பொருளை கொண்டிருப்பதில்லை, அத்துடன் இலிப்பிட்டு, புரதங்களையும் கொண்டிருப்பதில்லை.இவ்வகை மாப்பொருள், இலிப்பிட்டு, புரதங்களே உடல் எடை அதிகரிப்புக்கு காரணமாகின்றது.

ஆகையால் தண்ணீரை அருந்துவதன் மூலம் உட்கொள்ளும் உணவின் அளவை குறைத்து ஆரோக்கியமாக எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என சொல்லப்படுகிறது. மேற்படி ஆய்வில் அதிக BMI, எடையுள்ளவர்களில் நீரேற்ற அளவு குறைவாக இருந்தமை அவதானிக்கப்பட்டது.அதேபோல் குறைந்தளவு நீரருந்துபவர்களில் அதிக BMI, எடை அவதானிக்கப்பட்டது.

இதிலிருந்து அதிகம் நீரருந்துதல், நீர்த்தன்மையான பழங்கள், காய்கறிகளை உள்ளெடுத்தல் போன்றன உடல் எடையை கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க உதவும் எனப்படுகிறது. ஆனாலும் அதிக எடையுள்ளவர்களும் நீரை அதிகம் வேண்டுகிறார்கள். இது அவர்களில் நீரேற்றத்தின் அளவு குறைவாக இருப்பதால் தான் என மேற்படி ஆய்வுகள் சொல்கின்றன.