சச்சினின் ஓய்வுக்கு காரணம் என்ன?

316

Sachin-Tendulkar

கிரிக்கெட்டின் சாதனை சிகரம் என்று அழைக்கப்படும் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் முடிவுக்கு தள்ளப்பட்டதற்கு நானே காரணம் என்று பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் கிண்டல் செய்துள்ளார்.

அவர் அளித்த ஒரு பேட்டியில்,

டெண்டுல்கர் ஒரு சூப்பர் ஸ்டார். கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 50 ஆயிரம் ஓட்டங்களை குவித்துள்ளார். 2011ம் ஆண்டு உலக கோப்பை அரைஇறுதியில் தெண்டுல்கரின் (85 ஓட்டங்கள்) விக்கெட்டை நான் தான் வீழ்த்தினேன். இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாகும்.

அதன் பிறகு 2012ம் ஆண்டு மார்ச் 18ம் திகதி நடந்த ஆசிய கிண்ண கிரிக்கெட்டிலும் அவரது விக்கெட்டை (52 ஓட்டங்களில்) நான் தான் கைப்பற்றினேன். ஒரு நாள் போட்டியில் இது தான் அவரது கடைசி ஆட்டமாகும்.

இந்த போட்டியில் அவர் துஸ்ரா வகை பந்து வீச்சில் தடுமாறினார். உடனே மிஸ்பா உல்ஹக் என்னிடம், அவரை ஸ்லிப்பில் பிடி எடுத்து தூக்கி விடலாம் என்று கூறினார். இதையடுத்து யூனிஸ்கான் ஸ்லிப் பீல்டிங்குக்கு மாற்றப்பட்டார் எங்களது திட்டப்படியே உலகின் தரம் வாய்ந்த துடுப்பாட்ட வீரரான அவர் ஸ்லிப்பில் விக்கெட்டை இழந்தார்.

இது போன்ற எனது சிறந்த பந்து வீச்சே அவரை ஒரு நாள் போட்டியில் இருந்து வெளியேற நிர்ப்பந்தப்படுத்தியது என்றார்.