வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீநகரை அண்டிய பகுதியிலுள்ள குளத்திலிருந்து வயோதிபர் ஒருவர் சடலமாக இன்று(20.07.2016) காலை மீட்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியா ஸ்ரீநகர் பகுதியில் வசித்து வந்த அந்தோனி மயில்வாகனம் என்ற 66 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான இவரை கடந்த மூன்று தினங்களாக காணமற்போயுள்ளதாக நேற்றைய தினம் வவுனியா பொலிஸ் நிலையில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று காலை குறித்த வயோதிபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த சில வருடங்களாக இவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக இவரது மகள் தெரிவித்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.






























