சிறுமியின் கையைப் பிடித்து இழுத்தவர் விளக்கமறியலில்!!

473

Arrest1 (3)

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 12 வயதுடைய சிறுமியொருவரின் கையைப்பிடித்திழுத்த நபர் ஒருவரை இந்த மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

சம்பூர், மூதூர் 5, பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் கூனித்தீவு பகுதியில் கடைக்குச் சென்ற சிறுமியொருவரின் கையைப்பிடித்திழுத்ததாக சம்பூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

அதற்கமைய குறித்த நபர் திங்கட்கிழமை (18) மாலை கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.