ஆட்டோவில் கழுத்தை வெளியில் நீட்டிக்கொண்டு பயணித்தவர் பலியான பரிதாபம்..!!

656

auto

கழுத்தை வெளியில் நீட்டிக்கொண்டு முச்சக்கரவண்டியில் பயணித்த இளைஞர் ஒருவர் பலியான பரிதாபகரமான சம்பவமொன்று களுத்துறையில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் 21 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டியில் கழுத்தை வெளியில் நீட்டிக்கொண்டு பயணித்த போது எதிரே வந்த லொறியில் மோதியே அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது பலியாகி விட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை களுத்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.