வாய்த்தர்க்கம் முற்றி கைகலப்பாக மாறியதில் ஒருவர் பலி!!

590

Kathi

மினுவாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்தச் சம்பவம் இன்று அதிகாலை நடைபெற்றுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

ஹோட்டலில் பணியாற்றும் இரண்டு ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி, கைகலப்பாக மாறிய நிலையில் ஒரு ஊழியர் தனது சக பணியாளரை கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளார்.

இதில் இறந்த நபருக்கு 32 வயதிருக்கும் என்று தெரிய வந்துள்ளது. மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கைது செய்துள்ள மினுவாங்கொடைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.