ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்களை குத்தகைக்கு வழங்குகின்றது!!

890


srilankan

நிதிநெருக்கடியை எதிர்கொள்ளும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம், விமானங்களை குத்தகைக்கு வழங்கவுள்ளது.



இதன்படி, குறைந்தது 4 பயணிகள் விமானங்களையாவது பாகிஸ்தானிய சர்வதேச விமான நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏ330 விமானங்களை குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் பேச்சுவாரத்தைகள் இடம்பெறுகின்றன. ஏ350 விமானங்கள் தொடர்பிலான கட்டளை ரத்துச்செய்யப்பட்டநிலையிலேயே ஏ330 விமானங்கள் தொடர்பில் பேச்சுவாரத்தைகள் இடம்பெறுகின்றன என்று அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.



தமது நட்டத்தை ஈடுசெய்துக்கொள்வற்காகவே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது விமானம் குத்தகைக்கு விடப்படுவதாக தகவல் வெளியானபோதும் எவ்வாறான குத்தகை என்ற விடயம் வெளியாகவில்லை.



2012ஆம் ஆண்டு முதல் சுமார் 7 பயணிகள் விமானங்கள் 3.25 பில்லியன் டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டன.


இதற்காக மாதக்கட்டணமாக 450 000 டொலர்களை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் செலுத்திவருகிறது என அமைச்சர் கபீர் ஹாசிம் குறிப்பிட்டுள்ளார்.