நீங்கள் காணும் கனவுகளும் அதற்கான ஆச்சரியமான காரணங்களும்!!

417

Girl sleeping

கனவுகளில் பலவகை இருக்கின்றன. பொதுவாக அவற்றை நாம் கெட்ட கனவு, நல்ல கனவு என்று இரண்டு பிரிவுகளாக பிரித்து வைத்திருக்கிறோம். நல்ல கனவு என்பது நமக்கு மனதளவிலோ, உடலளவிலோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

ஆனால், கெட்ட கனவு தான் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஏன், இந்த கெட்ட கனவுகள் வருகின்றன, கனவென்றால் என்ன, அது ஏன் வருகிறது? உங்கள் ஆழ்மனதில் தேங்கிக்கிடக்கும் ஆசைகளும், நினைவுகளும்தான் கனவாக வருகின்றன. அன்றைய நாளில் உங்கள் மனதில் பசுமரத்தாணி போல பதிந்த நினைவுகளே பெரும்பாலும் கனவாக வரும்.

அது, நீங்கள் பார்த்த படமாக இருக்கலாம், ஏதேனும் நிகழ்வாக இருக்காலாம், எதுவாக கூட இருக்கலாம். ஆனால், அது உங்கள் மனதில் ஆழப் பதிந்திருக்க வேண்டும். இனி, கனவுகள் குறித்த வியக்கதகு காரணங்கள் பற்றிப் பார்க்கலாம்.

முடக்கம்

சில முறை உங்களுக்கே தெரியாமல் பயங்கரமான அல்லது அதிர்ச்சியான கனவுகளின் காரணத்தால் சில நிமிடங்கள் நீங்கள் உடல் அசைவற்று இருப்பீர்கள். சிலர் இதை நன்றாக உணர்ந்திருப்பார்கள், அவர்களில் சிலர் இந்த நிலையை பேய் என்று கூட கருதுவது உண்டு.

கொடுங்கனவு

குளிர்ந்த அறைகளில் உறங்குபவர்களுக்கு அதிகமாக கொடுங்கனவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறதாம்.

கனவுகளில் முடியாதவை

நீங்கள் என்ன முயற்சி செய்தாலும், கனவுகளில் தோன்றும் புத்தகங்களையோ, எழுத்துகளையோ உங்களால் படிக்க முடியாது, மற்றும் கடிகாரத்தில் மணி பார்க்க முடியாது.

தெளிவான கனவு

சில கனவுகளை நீங்கள் தெளிவாக பின் தொடர முடியும். சிலருக்கு தூக்கத்தில் இடையில் எழுந்த பிறகும் கூட மீண்டும் அந்த கனவு தொடர்ச்சியாக வரும். பெரும்பாலும் அந்த வகையான கனவுகள் மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும்.

அடிமையாதல்

சிலர் கனவுக்கு அடிமைகளாக இருப்பார்கள், கனவு இடையில் கலைந்துவிட்டாலும் கூட, விடாப்படியாக மீண்டும் மீண்டும் உறங்க முயற்சித்து மீண்டும் அந்த கனவினை எட்டிப்பிடிக்க முயற்சிப்பார்கள்.

கண் பார்வையற்றவர்களின் கனவு

இடைப்பட்ட நாட்களில் கண் பார்வையற்றவர்கள் அதுவரை அவர்கள் கண்ட நிகழ்வுகள், நபர்கள் குறித்து கனவுகள் காண வாய்ப்புகள் இருக்கின்றன. பிறவியிலேயே கண் பார்வையற்றவர்கள் கனவு காண வாய்ப்புகளே இல்லை.

முகங்கள்

நீங்கள் நினைக்கலாம் உங்கள் கனவில் யார் யாரோ வருவதாக. ஆனால், அப்படி ஒன்றும் நடக்காது. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த நபர்கள் மட்டுமே உங்கள் கனவில் வருவார்கள். குறைந்தது நீங்கள் டி.வி, நாளிதழ்களில் ஆவது அந்த நபர்களை பார்த்திருக்க கூடும்.

வண்ணங்கள்

நீங்கள் கனவில் பார்க்கும் அனைத்தும் கருப்பு, வெள்ளையாக தான் இருக்கும். கனவுகளில் வண்ணங்கள் தெரியாது.

வியாதி

அடிக்கடி உங்களுக்கு பயங்கரமான, அலறும்படியான கனவு வருகிறது எனில் அது மூளையில் சேதம் ஏற்படுகிறது என்பதற்கான அறிகுறியாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பார்கின்சன் நோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம்.