கபாலி திரைப்படத்திற்காக சென்னை, பெங்களூரில் சில அலுவலகங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளதை பார்த்து சர்வதேச ஊடகங்கள் வியந்துள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படம் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் யாரைப் பார்த்தாலும் கபாலிடா, நெருப்புடா, நெருங்குடா என்கிறார்கள்.
இன்று பலர் அலுவலகங்களுக்கு செல்லாமல் கபாலியை பார்க்க தியேட்டருக்கு செல்ல உள்ளனர். எப்படியும் இன்று காலை போன் செய்து எனக்கு வயிற்று வலி, தலைவலி, காய்ச்சல், தாத்தா அல்லது பாட்டி இறந்துவிட்டார்கள் என்று பலர் பொய் சொல்லி கபாலி படம் பார்க்க விடுப்பு கேட்பதை தவிர்க்க சில நிறுவனங்கள் தாமாகவே விடுமுறை அறிவித்துள்ளன.
சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கபாலி பட டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
இந்நிலையில் ஒரு நடிகரின் படம் வெளியாவதை முன்னிட்டு அலுவலகங்கள் விடுமுறை அறிவித்துள்ளதை சர்வதேச ஊடகங்கள் வியந்து பார்க்கின்றன.






