கல்கிஸை பிரதேசத்தில் நேற்று இரவு இடம் பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இத் தாக்குதலை நடத்தியவர்கள் பாதாள குழுவினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் களுபோவில மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.






