வவுனியாவில் இன்று(22.07.2016) காலை ஆரம்பமான இராணுவ முகாம் மீதான முற்றுகை ஆர்ப்பாட்டம் குடியிருப்பு கலாச்சார மண்டபத்திலுள்ள இராணுவத்தினரை வெளியேறுமாறு கோரி ஆரம்பித்து ஓமந்தையிலுள்ள இராணுவ முகாமை சென்றடைந்து, யாழ் பிரதான A9 வீதியினை வழிமறித்து பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதனால் A9 வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது.
தனியார் மற்றும் அரச காணிகளிலிருந்து இராணுவத்தினரை உடனடியாக வெளியேறுமாறு கோரியே இன்றைய ஆர்ப்பாட்டத்தினை வடபகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து ஜனநாயகத்திற்கான வடபகுதி இளைஞர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.
பொதுமக்களின் காணியிலிருந்து இராணுவத்தினர் உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள், உல்லாச விடுதிகள், விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் பொதுமக்கள் தமது காணிகளை இராணுவத்திடம் கொடுத்தவிட்டு வாடகைக்கு வசித்துவருவதாகவும் உடனடியாக இராணுவத்தினர் பொதுக்காணி, அரச காணியிருந்து வெளியேறி மக்கள் குடியிருப்புக்களுக்கு அனுமதிக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வவுனியாவிலிருந்து ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டம் ஓமந்தை, திருவையாறு, பரவிப்பாஞ்சான், கிளிநொச்சி, இயக்கச்சி, சாவகச்சேரி, வழியாக யாழ்ப்பாணம், காங்கேசன்துறையை சென்றடைய உள்ளதாக ஏட்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.































































