இந்திய அணியின் வெற்றியில் அனைத்து மூத்த வீரர்களுக்கும் பங்குண்டு: யுவராஜ் சிங்!!

374

Yuvraj-Singh

இந்திய அணியின் வெற்றியில் அனைத்து மூத்த வீரர்களுக்கும் பங்குள்ளதுள்ளது என்பதை எளிதில் மறந்து விடக்கூடாது. நாங்களும் ஹீரோ தான் என யுவராஜ் சிங் தெரிவித்தார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் 2011ல் நடந்த உலக கோப்பை போட்டியில், தொடர் நாயகன் விருது வென்றார். இதன் பின் ஏற்பட்ட நுரையீரல் கேன்சர் நோயிலிருந்து மீண்ட இவர் 2012 20-20′ உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றார்.

தற்போது சிறந்த பெறுபேறுகளை வெளிக்காட்டததால் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். இருப்பினும், 2015 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். இதற்காக, பிரான்ஸ் சென்று புகழ் பெற்ற டிம் எக்செட்டரிடம் பயிற்சி எடுத்து திரும்பினார்.

இது தொடர்பில் யுவராஜ் சிங் தெரிவித்ததாவது,

அணியில் நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்தியா திறமையான லெவன் அணியை தேர்ந்தெடுக்கும். அதேநேரம் இதில் இளமை மற்றும் அனுபவம் கலந்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த தேர்வின் போது வீரர்களின் முந்தைய அசத்தல்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் ஒருபோதும் கூறப்போவது இல்லை.

ஆனால், கடந்த காலத்தில் இந்த வீரர்கள் பெற்றுத்தந்த வெற்றி மற்றும் தேசத்துக்காக என்ன சாதித்தனர் என்பதை மறந்து விடக் கூடாது.
சமீபத்தில் இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். தவிர இந்திய அணி சம்பியன்ஸ் கிண்ணம், சிம்பாவே தொடரில் அசத்தியது மகிழ்ச்சி தருகிறது. இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல சகுனம் தான்.

அடுத்த உலக கோப்பை தொடருக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. இந்நிலையில் நாளை என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. இருப்பினும், விரைவில் இந்திய அணியில் இடம் பெற முயற்சிப்பேன்.

என்னைப் பொறுத்தவரை இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். இதனால் தான் பிரான்ஸ் சென்று பயிற்சியில் ஈடுபட்டேன். இதன் மூலம் நல்ல உடற்தகுதியை பெற்றுள்ளேன். என்னுடன் வந்த சகிர் கான், உடல் எடையில் 6 கிலோகிராம் குறைத்துள்ளார்.

நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். இதனால் பயிற்சியின் போது ஒருங்கிணைந்து செயல்பட உதவியாக இருந்தது என யுவராஜ் சிங் கூறினார்.