வவுனியாவில் 8 வயதுச் சிறுவன் கிணற்றில் விழுந்து மரணம்!!(2ம் இணைப்பு)

554

 
வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் கிணற்றிலிருந்து 8வயது சிறுவனின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

வவுனியா மூன்றுமுறிப்பு அரச பேரூந்து தரிப்பிட நிலையத்திற்கு அரகிலுள்ள பகுதியில் வசித்துவந்த அமித் விக்கிரமசிங்க மவிந்து என்ற 8 வயதுடைய தரம் நான்கில் கல்வி கற்று வந்த குறித்த சிறுவன் நேற்று பாடசாலை சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

தாய் கூலிவேலைக்கு சென்றுள்ளார் தந்தை சாரதியாக பணியாற்றுகின்றார். பாடசாலையிலிருந்து பாட்டி வீட்டிற்கு செல்வது வழமை எனினும் சம்பவ தினம் குறித்த சிறுவன் பாட்டி வீட்டிற்கு செல்லாது சிறிது தூரத்திலிருக்கும் தனது வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் நேற்று மாலை 6 மணியளவில் தாய் வீட்டிற்கு வந்தபோதும் குறித்த சிறுவனைக் காணாமல் அயலில் தேடியுள்ளார். எனினும் சிறுவனைக் காணவில்லை.

கணவருக்கு தகவல் வழங்கியதுடன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.

குறித்த பகுதியிலிருந்த தந்தையின் நண்பர்கள் சிலர் கிணற்றுக்குள் தேடுதலை மேற்கொண்டபோது சிறுவன் இறந்த நிலையில் கிணற்றுக்குள் அடியிலிருந்து மீட்கப்பட்டு உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோதும் சிறுவன் இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தினை பார்வையிட்டதுடன் விபத்து மரணம் என்று விசாரணையில் தெரியவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணையின் பின்னர் நாளை சடலம் உறவினரிடம் ஒப்படைக்கப்ட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

IMG_2681 IMG_2682 IMG_2683 IMG_2684