வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா : முதல்நாள் நிகழ்வுகள்!!(காணொளி)

1272

 
வவுனியாவின் பிரபல பாடசாலைகளில் ஒன்றான புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா இன்று (24.07.2016) ஞாயிற்றுகிழமை காலை 9 மணியளவில் பாடசாலை அதிபர் த.சுபாஸ்கரன் தலைமையில் ஆரம்பமானது.
இரண்டு நாட்களாக நடைபெறவுள்ள நிகழ்வுகளின் முதல் நாளான இன்றைய நிகழ்வுகளுக்கு பிரதம விருந்தினர்களாக வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி ஆகியோரும்,

சிறப்பு விருந்தினர்களாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், K.K.மஸ்தான் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், செந்தில்நாதன் மயூரன் ஆகியோரும்,

கெளரவ விருந்தினர்களாக இ.ரவீந்திரன் (வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர்), வ.ஸ்ரீஸ்கந்தராஜா (வலயக் கல்விப் பணிப்பாளர்-வவுனியா வடக்கு), திருமதி அன்ரன் சோமராஜா (வலயக் கல்விப் பணிப்பாளர்-வவுனியா தெற்கு), கலாநிதி த.மங்களேஸ்வரன்(முதல்வர் -வவுனியா வளாகம்), தா.அமிர்தலிங்கம்(கோட்டக் கல்வி அதிகாரி, ஓமந்தை) ஆகியோரும்,

அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மதகுருமார்கள், ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கல்வியாளர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து சிறப்பித்தனர்.

இன்றைய நாள் நிகழ்வுகளில் பாடசாலையின் வளர்ச்சிக்கு பங்களித்த அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் கெளரவிக்கப்பட்டதுடன், பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களும் கெளரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இசைத்தட்டு வெளியீடு நடைபெற்றதுடன் இறுதியில் பாடசாலை மாணவர்களால் நாடகம் ஒன்றும் அரங்கேற்றப்பட்டது. இன்றய நாள் நிகழ்வுகள் 2 மணியளவில் நிறைவுபெற்றது.

நாளைய நிகழ்வுகள்(25.07.2016) பகல் 1.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.

இன்றைய நிகழ்வுகள் முழுவதும் வவுனியா நெற் இணையத்தினூடாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதுடன். நாளைய நிகழ்வுகளும் முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன. நேரடி ஒளிபரப்பிற்கு அனுசரணையை லண்டனில் வசிக்கும் புதுக்குளத்தைச் சேர்ந்த பத்மநாதன் சதீஸ்வரன் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

12345678910111213141516171819202122232425262728293031343536373839404142434445