பிச்சையெடுத்த வெளிநாட்டுப் பிரஜை கைது!!

729

begging

வீதியோரத்தில் இருந்து வயலின் இசைத்து பிச்சையெடுத்த வெளிநாட்டுப் பிரஜையை எல்ல பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் ஒரு மாத விடுமுறையினை கழிப்பதற்காக கடத்த 8 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின்கீழ் சுற்றூலா பயணிகள் பிச்சையெடுப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.அன்றாட நடவடிக்கைகளுக்கு பணம் போதாமையினாலே தான் பிச்சையெடுத்தாக கைது செய்யப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

குறித்த வெளிநாட்டவர் எச்சரிக்கை செய்யப்பட்டு பின்பு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.