இந்துக் கோயிலுக்கு பாதுகாப்பு அளிக்கும் முஸ்லீம் அதிகாரி!!

593

Securiry

அமெரிக்காவில் உள்ள பிரபல இந்து கோவிலுக்கு பாதுகாப்பு அதிகாரியாக முஸ்லீம் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள புனே லோனாவாலா வை சேர்ந்தவர் ஜாவேத்கான்.இவர் கடந்த 2000ம் ஆண்டு அமெரிக்க சென்று, 2001 ம் ஆண்டு இண்டியானாவில் நிரந்தரமாக குடியேறியுள்ளார். மேலும் அங்குள்ள உள்ளூர் காவல் துறையில் பணியாற்றி வருகிறார்.

டெக்வான்டா என்ற தற்காப்பு கலையில் 8 முறை கருப்பு நிற பெல்ட்கள் மற்றும் கிக்பாக்ஸிங்கில் சம்பியன் பட்டம் வென்ற இவர், தற்போது அமெரிக்காவின் இண்டியான பொலிஸ் நகரில் உள்ள பிரபல இந்து கோயிலின் பாதுகாப்பு பணியை கவனிக்கும் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ஜாவேத் கூறியதாவது:எங்கள் குடும்பத்தில் சில பேர் இந்துக்கள்,மேலும் இந்து,முஸ்லீம் மதங்கள் வேறுபாட்டில் நம்பிக்கை கிடையாது.

இதையும் மீறி நாம் அனைவரும் இந்தியர்கள், இதனால் நான் வேறு எதுவும் சிறப்பாக செய்யவில்லை,என்னுடைய வேலையைதான் செய்கிறேன் என்று கூறியுள்ளார்.