புகையிரதத்திற்கான தண்டப்பணத்தை அதிகரிக்க திட்டம்!!

296

welcome-page2_01
பயணிப்பவர்களால் புகையிரதங்களில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைக்காக அறவிடப்படும் தண்டப் பணத்தை மூவாயிரம் ரூபாவாக அதிகரிக்க புகையிரத திணைக்களம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புகையிரத மிதிபலகையில் பயணித்தல், புகையிரதம் நிறுத்தும் முன்னர் இறங்குதல், புகையிரதத்திற்குள் புகைத்தல், மது அருந்துதல் மற்றும் ஏனைய பயணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட தவறுகளுக்கே தண்டப்பணம் அதிகரிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், புகையிரதத்தில் யாசகம் செய்வோர் மற்றும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும் குறித்த தண்டப்பணம் அறவிடப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.இதுவரை குறித்த தவறுகளுக்காக 100 ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.எனினும், பயணிகளால் கிடைத்து வரும் அதிக முறைபாடுகள் காரணமாக இந்த தண்டப்பணத்தை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.