பெற்றோரை எரித்து கொலை செய்ய முயற்சித்த மகன் பொலிஸாரினால் கைது!!

606

Fire-Hands-Screensaver_1

தாய் மற்றும் தந்தையை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு எரித்து கொலை செய்த முயற்சித்த 23 வயதான மகனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவம் சீகிரிய பிரதேசத்தில் நடந்துள்ளது.

மதுபோதையில் வீட்டுக்கு சென்ற மகன் பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அவர்களுடன் சண்டையிட்டுள்ளார். இதன் பிறகு பெற்றோரை வீட்டுக்குள் வைத்து பூட்டிய மகன் வீட்டுக்கு தீ வைத்துள்ளார்.

வீடு எரிவதை கண்ட கிராமத்து மக்கள் உடனடியாக செயற்பட்டு, தீயணைப்பு படையினரை வரவழைத்து தீயை கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய சீகிரிய பொலிஸார் மகனை கைதுசெய்துள்ளனர்.