பாடசாலை நேரத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களுக்கு அதிபர்களே பொறுப்பு : நீதிபதி இளஞ்செழியன்!!

435

Ilancheliyan

யாழ். மாவட்ட அதிபர்களுக்கான, பாடசாலை சட்டம் குறித்த அறிவுறுத்தல் கூட்டம் நேற்று நடைபெற்றது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன், மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ். மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் இதில் கலந்துகொண்டனர்.

பாடசாலை நேரத்தில் ஏதேனும் குற்றச்செயல்கள் இடம்பெறுமாயின், அதற்கு முதலில் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அதிபர்கள் என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இதன்போது தெரிவித்தார்.

சமுதாயம் திருந்தவேண்டுமானால் தண்டனைகள் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன் தெரிவித்தார்.