சூரிய சக்தியால் இயங்கும் சோலார் இம்பல்ஸ் 2, தனது உலக சுற்றுப் பயணத்தை நிறைவு செய்தது!!

598

Flight

சூரிய சக்தியால் இயங்கும் விமானமொன்று உலகை சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

சோலார் இம்பல்ஸ் 2 எனப்படும் குறித்த விமானம் கெய்ரோவிலிருந்து அபுதாபிக்கு தனது இறுதி பயணத்தை கடந்த 24.07.2016 அன்று முன்னெடுத்திருந்தது.

சோலார் இம்பல்ஸ் 2 கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உலகை சுற்றிவரும் பயணத்தை ஆரம்பித்தது.

17 கட்டங்களைக் கொண்ட இந்த பயணத்தில் சோலார் இம்பல்ஸ் 2 நான்கு கண்டங்கள், 3 கடல்கள் மற்றும் 2 சமுத்திரங்களை வலம் வந்துள்ளது.

உயர் தட்பவெப்ப நிலையை சமாளித்து குறித்த விமானம் இலக்கை எட்டியுள்ளதையடுத்து சூரிய சக்தியால் இயக்கப்படும் விமானமொன்று உலகை சுற்றிய வரலாற்று சாதனையை சோலார் இம்பல்ஸ் 2 எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.