இலங்கைத் தமிழர் பிரச்சினை : தமிழக சட்டசபையில் அமளி!!

1265

TN

இலங்கைத் தமிழர் பிரச்சினை, விவகார‌த்தால் இந்திய சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது. அமளியில் ஈடுபட்ட திமுகவினருக்கு சபாநாயகர் தனபால் கடும் எச்சரிக்கை விடுத்தார்.

தமிழக சட்டசபையில் கடந்த வாரம் 2016-17ம் ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் மீதான விவாதம் நேற்று சட்டசபையில் 2வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.

தமிழக சட்டசபையில், பட்ஜெட் மீதான பொது விவாதத்தின்போது பேசிய அதிமுக எம்.எல்.ஏ. ஓ.கே.சின்ராஜ், இலங்கை இறுதிக்கட்ட போரின்போது அப்போதைய திமுக அரசு எதுவும் செய்யவில்லை என குறிப்பிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் முழக்கமிட்டதால் அவையில் அமளி நிலவியது.

திமுக உறுப்பினர்கள் பேரவை விதிகளை மதிப்பதில்லை என கண்டனம் தெரிவித்த சபாநாயகர் தனபால், விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.