வவுனியா மேல் நீதிமன்றில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தவருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை!!

626

Vavuniya-Court

கடந்த 2010ம் ஆண்டு ஹெரோயின் போதைப் பொருளினை வியாபாரம் செய்யதாகவும் தனது உடமையில் மறைத்து வைத்திருந்ததாகவும் தெரிவித்து வவுனியாவைச் இருவருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கிற்கான தீர்ப்பு 29.04.2016 அன்று வழங்கப்படவிருந்தது எனினும் அப்போதைய வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் அவர்கள் திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றதன் காரணமாக இவ் வழற்கிக்கான தீர்ப்பு 22.07.2016 அன்று பிற்போடப்பட்டது.

பிரதம நீதியரசரின் விஷேட நியமணத்தின் பேரில் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு வருகை தந்த மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் அவர்கள் இரண்டாம் எதிரிக்கு இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கும் குற்றம் அற்றவர் என காணப்பட்டு விடுவித்து விடுதலை செய்யப்பட்டார்.

எனினும் இவர் முதல் நாளான 21.07.2016 அன்று இரவு 11.20 மணிக்கு அனுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இறந்து விட்டதாக மன்றிற்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த வழங்கிலே பெயர் குறிப்பிடப்பட்ட முதலாம் எதிரிக்கு எதிராக சுமத்தப்பட்ட ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரம் செய்தார் என்ற முதலாவது குற்றச்சாட்டிற்கு குற்றம் அற்றவர் என்று காணப்பட்டு குறித்த குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

அவருக்கு எதிராக இரண்டாவது குற்றச்சாட்டான ஹெரோயின் போதைப் பொருளினை தனது உடமையில் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டிற்கு குற்றவாளியாக காணப்பட்டு ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர்.