ஷங்ரீலா நிறுவனம் அரசாங்கத்திடம் நட்டஈடு கோரியுள்ளது!!

456

Shangri-La
காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஷங்ரீலா ஹோட்டல், போர் சிட்டி திட்டத்தின் மூலம் மறைக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடல் காட்சியைப் பார்க்கக் கூடிய வகையில் ஹொட்டல் நிர்மாணிக்கப்படுவதாகவும், போர்ட் சிட்டி திட்டத்தின் ஊடாக கடலை ஹோட்டலில் இருந்து பார்க்க முடியாத நிலைமை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இதனால் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையை அரசாங்கம் மீறியுள்ளதாகவும் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமெனவும் ஷங்ரீலா ஹோட்டல் கோரியுள்ளது.முன்னால் கடல் தென்படுவதனை கருத்திற்கொண்டே ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. ஹோட்டலின் முன்னால் பாரிய நகரமொன்று நிர்மாணிக்கப்படுவதனால், சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்க முடியாது போகும் என தெரிவித்துள்ளது.

இதனால் ஹோட்டலுக்கு அரசாங்கம் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நட்டஈடு வழங்கப்பட முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. அபிவிருத்தித் திட்டங்களின் போது சில சில மாற்றங்கள் ஏற்படும் எனவும் இது குறித்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது. 300 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 500 அறைகளைக் கொண்ட பாரிய நட்சத்திர ஹோட்டல் ஒன்றாக ஷங்ரீலா நிர்மாணிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.