சென்னை விமான நிலையத்தை பதற வைத்த பாம்பு பார்சல்!!

587

snake-park
தைவான் நாட்டிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில், பாம்பு ஒன்று பார்சலில் அனுப்பப்பட்டுள்ளதை கண்டு விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.நேற்று இரவு தைவானில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பார்சல்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

சோதனையின் போது, ஒரு பார்சல் வித்தியாசமாக இருந்துள்ளது. குறித்த பார்சலை திறந்து சோதனை செய்து பார்த்தபோது அதனுள் பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.பின்னர், பார்சல் குறித்து நடத்திய விசாரணையில், அது சென்னை கேகேநகர் 68வது தெரு முகவரிக்கு வந்துள்ளது.மேலும் அந்த பார்சலினுள் காஸ் அடுப்பு, மிக்சி மற்றும் டிவிடி பிளேயர்கள் இருந்துள்ளன.

பார்சலை அனுப்பியவரின் முகவரி தைவான் மொழியில் இருந்ததால் அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை கேகேநகர் 68வது தெருவிற்கு சென்று விசாரணை நடத்தியபோது, அது போலி முகவரி என்பது தெரியவந்துள்ளது.மலைப்பாம்பை பறிமுதல் செய்துள்ள அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.