
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் முதியவர் ஒருவர், நள்ளிரவில் போக்கிமோன் கோ கேம் விளையாடி சேறு நிரம்பிய குழியில் சிக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோய்மான்ஸ் நகரத்தில் 62 வயது முதியவர் ஒருவர், நள்ளிரவு 2 அளவில் தனது கைப்பேசியில் போக்கிமோன் கோ கேம்மை விளையாடிவுள்ளார்.
விளையாட்டில் மூழ்கிய முதியவர், ஒரு மான்ஸ்டரை பிடிப்பதற்காக தனது வீட்டிற்கு பின்னுள்ள காட்டிற்கு சென்றுள்ளார், அப்போது திடீரென சேறு நிரம்பிய குழியில் விழுந்துள்ளார். இடுப்பு பகுதி வரை குழியில் சிக்கியதால் அவரால் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, இதனையடுத்து அவர் தனது கைப்பேசியை பயன்படுத்தி அவரச உதவி எண்ணான 911-ஐ அழைத்துள்ளார்.முதியவரின் கைப்பேசி வழிகாட்டுதலின் மூலம் சம்பவயிடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அவரை பத்திரமாக மீட்டுள்ளனர்.
கைப்பேசியில், நிஜமாக நாமே களத்தில் இறங்கி விளையாடும் படி வடிவமைக்கப்பட்டுள்ள ’போக்கிமோன் கோ’ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.





