மாட்டிறைச்சி கொண்டு சென்றதற்காக முஸ்லிம் பெண்களை அடித்து உதைத்த கும்பல் : அதிர்ச்சி வீடியோ!!

576

Attack

மத்தியப் பிரேதசத்தில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக இரண்டு முஸ்லிம் பெண்களை, இந்து மத ஜனதா தளம் ஆர்வலர்கள் கூட்டமாக கூடி தாக்கியுள்ள சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் இறந்த மாட்டின் தோலை கொண்டு சென்ற நான்கு தலித் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம், தலித் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மண்ட்சோர் ரயில் நிலையத்தில் மாட்டு இறைச்சியை விற்பனைக்காக கொண்டு சென்றதாக இரண்டு முஸ்லிம் பெண்களை, இந்து மத ஜனதா தள அமைப்பினர் கூட்டமாக சேர்ந்து தாக்கியுள்ளனர். இச்சம்பவம் வீடியோவாக வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வீடியோவில், இந்து மத ஜனதா தள அமைப்பினர் குழுவாக சேர்ந்து, இரண்டு முஸ்லிம் பெண்களை கடுமையாக தாக்குகின்றனர். கூட்டத்தை நிறுத்த முயன்ற பொலிசார் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.

சம்பவத்தை தொடரந்து இரண்டு முஸ்லிம் பெண்களையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

பின்னர், அவர்கள் கொண்டு வந்த இறைச்சியை ஆய்வு செய்ததில், அது பசுவின் இறைச்சி இல்லை எனவும், எருமையின் இறைச்சி எனவும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் பூபிந்தர் சிங், சட்டத்தை கையில் எடுத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.