வவுனியா நெடுங்கேணியில் காதர் மஸ்தான் பா.உ அனுசரணையில் மருத்துவ முகாம்!!

1043

 
இம் மருத்துவ முகாம் கே.காதர் மஸ்தான் பா.உ அவர்களின் அனுசரணையுடன் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட நெடுங்கேணி மருதோடை கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அன்றைய தினம் பெருமளவிலான மக்கள் வருகை தந்து மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்று சென்றனர் இதன் நோக்கமானது. வாழ்வாதார நிலையில் பின்தங்கிய கிராமங்களில் வாழும் மக்களை நாடிச்சென்று அவர்களின் தேவையை உணர்ந்து சுகாதார ஆலோசனை, விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை வழங்குவதாகும்.

இம் மருத்துவ முகாமில் வைத்தியர் மு.ஆ.முபாரிஸ் மற்றும் மருத்துவ குழாமினர் கலந்து கொண்டதுடன் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் மாஹிர், அலுவலக உதவியாளர் சஜாஸ் மற்றும் ஊடக உறவு வெளிவிவகார செயலாளர் நவ்பர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

1 img 1 img 3 img 4 img 5 img 6 img 7