உலகிலேயே அதிக கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறை இது தான்!!

395

Jail

பிலிப்பைன்ஸ் நாட்டில் தலைநகர் மணிலாவில் குயேஷான் புறநகர் பகுதி உள்ளது. அங்கு மத்திய சிறைச்சாலை உள்ளது. உலகிலேயே அதிக கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறை என அழைக்கப்படுகிறது.

இங்கு மொத்தம் 3800 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இது கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு 800 கைதிகளை அடைக்க மட்டுமே கட்டப்பட்டது. இது 4 அடுக்கு மாடிகளை கொண்டது.

தற்போது அங்கு நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஏராளமானவர்கள் அடைக்கப்படுகின்றனர். இங்குள்ள 130 கைதிகளுக்கு ஒன்று என்ற விகிதத்தில் கழிவறைகள் உள்ளன.

இரவு நேரத்தில் கைதிகள் நிம்மதியாக தூங்க முடியாது. அவர்கள் சிறை வளாகத்துக்குள் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் உடைந்து குண்டும் குழியுமாக கிடக்கும் தரையில்தான் உறங்க வேண்டும். அதுவும் ஷிப்ட் முறையில்தான் தூங்க முடியும். மழை பெய்தால் கேட்கவே வேண்டாம். அன்று இரவு முழுவதும் கைதிகளின் தூக்கம் அம்பேல்தான்.

இங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு தலா 1.10 டொலர் (160) மதிப்புள்ள உணவு மற்றும் மருந்து வழங்கப்படுகிறது. எனவே கைதிகளின் கோரிக்கைக்கு இணங்க தற்போது சிறையில் சில புனரமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது பிலிப்பைன்சின் புதிய அதிபராக ரோட்ரிகோ டுடரேட் பதவி ஏற்றுள்ளார். அவர் போதை மருந்து கும்பலை வேரறுக்க சபதம் மேற்கொண்டுள்ளார். அதனால் அக்கும்பலை சேர்ந்தவர்கள் வேட்டையாடப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். அதனால் அங்கு இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.