
அதிக மதுபோதையில் சுயநினைவின்றி இருந்த பாடசாலை மாணவி ஒருவர், அநுராதபுரம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார். அநுராதபுரம் பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய இவரை அநுராதபுரம் வித்தியாலய மாவத்தையில் இருந்து மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் குறித்த மாணவி நேற்றைய தினம் தனக்கு பிரத்தியேக வகுப்பு இருப்பதாக கூறி தனது காதலருடன் இணைந்து சென்றுள்ளதாகவும், இதன்போது அவரது காதலன் மதுவுடன் போதை மாத்திரை ஏதாவது கலந்து பருகக் கொடுத்த பின்னர் மாணவியை துஸ்பிரயோக படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எனினும் குறித்த இடத்திலிருந்து மாணவியின் காதலன் தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த மாணவி இன்று காலை வரை சுயநினைவுக்கு வராததால் இவரிடம் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.





