போலிப் பெயர்களில் பல்வேறு இடங்களில் திருமண மோசடி! ஆசாமிக்கு விளக்கமறியல்!!

526

Engaged-Couple-Hands-With-Rings-Engagement-Wishes

போலியான பெயர்களை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் திருமண மோசடி செய்து வந்த ஆசாமியொருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடவத்தை கிரில்லவல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் பத்திரிகைகளில் வெளியாகும் மணமகன் தேவை விளம்பரங்கள் மூலம் வசதியான பெண்களை தொடர்பு கொண்டு திருமணம் செய்வதாக வாக்களித்து ஏமாற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இதன்போது பெண்களை துஷ்பிரயோகம் செய்வதுடன், அவர்களிடமிருந்து நகை, பணம் போன்றவற்றையும் தந்திரமான முறையில் பறித்துக் கொண்டுள்ளார். ஹிமால் சஜீவன என்ற பெயரைக்கொண்ட குறித்த நபர் இதற்காக பல்வேறு போலிப் பெயர்களில் தயாரிக்கப்பட்ட மோசடி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியுள்ளார்.இவர் குறித்து நீர்கொழும்பு, மாத்தறை, கந்தரை போன்ற பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடவத்தை பொலிசாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து போலி அடையாள அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.மஹர நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 03ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.