
தங்களது திருமணத்தை வித்தியாசமாக நடத்த வேண்டும் என்றுதான் எல்லா மணமக்களும் ஆசைப்படுவார்கள்.ஆனால், இந்த மணமக்கள் போன்று வித்தியாசமாக சிந்திப்பது இதுவே முதல் முறை, மாகாராஷ்டிரா மாநிலம் Kolhapur நகரை சேர்ந்த Zehdir, Reshma ஆகிய இருவரும், Ropeway போக்குவரத்தின் உயரத்தில் (தரையிலிருந்து சுமார் 90 மீற்றர்) தொங்கி கொண்டு திருமணம் செய்துள்ளனர்.
இவர்கள் எதற்காக இவ்வாறு ஒரு முடிவை எடுத்தார்கள் என்றால், ropeway போக்குவரத்தில் சந்தித்துக்கொண்ட இவர்கள், அங்குதான் காதலில் விழுந்துள்ளார்கள். அதன் காரணத்தினாலேயே , இவர்கள் இருவரும் இவ்வாறு திருமணம் செய்துகொண்டனர், இவர்கள் திருமணத்திற்கு எவ்வித பாதுகாப்பும் அளிக்கப்படவில்லை, எவ்வித பிரச்சனையும் இன்றி காதல் ஒன்று கூடிய இடத்திலேயே கல்யாணத்தையும் நடத்தியுள்ளனர்.








