முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் நாயைப் போல் அடைத்து வைக்கப்பட்டேன் என ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
அதிமுக அடிப்படை உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா அளித்துள்ள பேட்டியில், சென்னை போயஸ் தோட்டத்தில் ஒரு நாயைப் போல அடைத்து வைக்கப்பட்டேன்.
வெளியில் இருந்து என்னுடைய குடும்பத்தினருடன் கூட பேச அனுமதிக்கவில்லை, வீட்டுக்கு செல்லவும் என்னை அனுமதிக்கவில்லை.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது, நான் சுதந்திரமாக செயல்படுவேன்.எனக்காக குரல் கொடுத்த திமுக, பாஜக, காங்கிரசுக்கு நன்றி.
இதனால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது, கடந்த இரண்டு மாதங்களாகவே என்னை ராஜினாமா செய்ய சொல்லி வற்புறுத்துகிறார்கள்.
வேறு யாருக்கோ எம்பி பதவியை தர திட்டமிட்டுள்ளேன், பதவியை விட்டுக்கொடு என ஜெயலலிதா என்னிடம் கேட்டிருந்தால் நானே விட்டுக்கொடுத்திருப்பேன். ஆனால் அவர்கள் என்னை நடத்திய விதம்தான் ராஜினாமா செய்ய நான் மறுப்பதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.






