புலியுடன் விளையாடிய நபர் : கூண்டுக்குள் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

638

Tiger

சவுதி அரேபியாவில் நண்பரின் புலி ஒன்றுடன் விளையாட்டு காட்டிய நபரை அந்த புலி கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவில் நபர் ஒருவர் தமது வீட்டில் புலி ஒன்றை வளர்ப்பு மிருகமாக வளர்த்து வந்தார். அந்த புலிக்கு தனியாக கூண்டு ஒன்றையும் அமைத்து அசம்பாவித சம்பவம் எதுவும் எவருக்கும் நேர்ந்துவிடாத வகையில் பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அவரது நண்பரின் அனுமதியுடன் இவர் கூண்டுக்குள் சென்று புலியுடன் விளையாட்டு காட்டியுள்ளார். இந்த சம்பவத்தை புலியின் உரிமையாளரான நண்பர் தமது கமராவில் பதிவு செய்து வந்துள்ளார்.

இதனிடையே அந்த நபரின் விளையாட்டில் கோபமடைந்த புலி திடீரென்று அவரை தாக்கியுள்ளது. முதலில் அதை கருத்தில் கொள்ளாத அந்த நபர் அந்த மிருகத்திடம் போக்கு காடுவதை போல கூண்டுக்குள் ஓடி நின்றுள்ளார். ஆனால் புலி மூர்க்கத்தனமாக தாக்கத்துவங்கியுள்ளது.

அந்த நபரின் காலை கவ்விக்கொண்டு அது மறைவிடத்திற்கு அவரை இழுத்து சென்றுள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் உயிருக்கு பயந்து அலறியுள்ளார். ஆனால் இதை பொருட்படுத்தாத அதன் உரிமையாளர் சிரித்துக்கொண்டே கமராவில் படம் எடுத்து வந்துள்ளார்.

இதனிடையே புலிக்கு பயிற்சி அளிக்கும் நபர் சுதாரித்துக்கொண்டு தடி ஒன்றால் புலியிடம் இருந்து அந்த நபரை விடுவிக்க முயற்சி எடுத்துள்ளார். பின்னர் ஒருவழியாக புலியிடம் இருந்து அந்த நபர் விடுபட்டு தப்பி கூண்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

சவுதி மற்றும் ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகளில் இதுபோன்ற காட்டு விலங்குகளை வீட்டில் வளர்ப்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

கடந்த மாதம் சீனாவில் விலங்கியல் பூங்கா ஒன்றில் சுற்றுலா சென்ற பயணி ஒருவரை காரில் இருந்தே புலி ஒன்று இழுத்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. இதில் காப்பாற்ற சென்ற பெண்மணி உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.