தலித் பெண்ணுக்கு நேர்ந்த துயர சம்பவம்! சிறுநீரை குடிக்க வைத்த கொடூரம்!!

507

244066E900000578-2885994-image-a-104_1419439717009
பீகாரில் தலித் பெண் ஒருவரை கொடுமைப்படுத்தி நிர்வாணப்படுத்தியதுடன் சிறுநீரை குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் பிப்ரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் அஜய் பாஸ்வன், கூலித் தொழிலாளி. இவரின் வீட்டுக்குள் நுழைந்த நபர்கள் இவரின் மனைவியை நிர்வாணப்படுத்தி சிறுநீரை குடிக்க வைத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அச்சமடைந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி அவருடைய தந்தை விட்டு சென்றதாக தெரிகிறது, இதுதொடர்பாக பொலிசிலும் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, பிப்ரா கிராமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது, இதற்கு குறித்த தலித் பெண் சூனியம் வைத்தது தான் காரணம் என நம்பியுள்ளனர். இதற்காக அந்த பெண்ணை நான்கு நபர்கள் சேர்ந்து நிர்வாணப்படுத்தியதுடன் அடித்து உதைத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.