காற்சட்டை அணியாமல் நீதிமன்றத்திற்கு வந்த பெண் குற்றவாளி: அதிர்ச்சியடைந்த நீதிபதி!!

477

36BC59C700000578-0-image-a-2_1469918265767
அமெரிக்காவில் நீதிமன்றத்திற்கு வந்த பெண் குற்றவாளி ஒருவர் காற்சட்டை அணியாமல் வந்தது நீதிபதியை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. அங்காடிகளில் திருடிய குற்றதிற்காக பெண்மணி ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறைகளில் பெண் கைதிகளுக்கு வழங்கப்படும் Jumpsuit ஆடை இவருக்கு வழங்கப்படவில்லை, அதனால் இவர் தனது சொந்த ஆடையை பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் மீதான வழக்கு விசாரணை, Louisville நகரில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்திற்கு வந்த இந்த பெண் கைதி, காற்சட்டை அணியாமல் வந்துள்ளார். இதனைப்பார்த்த நீதிபதி Amber Wolf கோபம் கொண்டு இது நீதிமன்றம், இவ்வாறு காற்சட்டை இன்றி எவ்வாறு நீங்கள் வரலாம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு அப்பெண்மணி, நான் கடந்த 4 நாட்களாக சீருடை தருமாறு கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் இன்று தருகிறேன், நாளை தருகிறேன் என கூறி நாட்களை கடத்தினர். அதனால் தான் நீதிமன்றத்திற்கு இவ்வாறு வந்துள்ளேன் என விளக்கம் அளித்துள்ளார். இதனைக்கேட்ட நீதிபதி, உடனடியாக தொலைபேசி வாயிலாக சிறை உயர் அதிகாரியை தொடர்புகொண்டு, இந்த தவறுக்காக விளக்கம் கேட்டுள்ளார். சிறை உயர் அதிகாரியும் இதுபோன்று நடந்துள்ளது எனது கவனத்திற்கு வரவில்லை என்று கூறியுள்ளார்.

இறுதியில் அக்குற்றவாளி பெண்ணுடன் வந்த சிறை அதிகாரியை கண்டித்துவிட்டு உடனடியாக ஒரு ஆடையை அப்பெண்ணுக்கு வழங்க வேண்டும் என கூறியுள்ளார். அக்குற்றவாளிக்கு ஆடை வழங்கப்பட்ட பின்னர், சிறையின் அலட்சிய செயலால் நான் உன்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என நீதிபதி கூறியுள்ளார்.இதனையடுத்து திருட்டில் ஈடுபட்ட குற்றத்திற்காக 100 டொலர் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.