பரீட்சை மண்டபத்துக்கு தாமதமாக வந்த மேற்பார்வையாளர் பதவி பறிப்பு!!

531

exam-sri-lanka

பரீட்சை மண்டபத்துக்கு மேற்பார்வையாளர் ஒருவர், தாமதமாக கடமைக்கு வந்தமையால், பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இன்று நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளன. இந்தநிலையில், களனி – ஹேனேகம மத்திய மகா வித்தியாலயத்தின் (பரீட்சை மத்திய நிலையம் இலக்கம் 340) மண்டப இலக்கம் 1 இன் மேற்பார்வையாளர் தாமதமாக கடமைக்கு வந்ததாக தெரியவந்துள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும், பரீட்சார்த்திகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை வழங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், காலை 11.00 மணிக்கு நிறைவடைய வேண்டிய வினாப் பத்திரத்திற்காக மதியம் 12.30 வரை காலம் வழங்கப்பட்டதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் கூறியுள்ளார்.

எனினும், சம்பந்தப்பட்ட மேற்பார்வையாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.