ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை!!

552

61684

இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பல்லேகலையில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி அவுஸ்திரேலியாவை 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதற்கு அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரங்கனா ஹேரத்தும் முக்கிய காரணமாக இருந்தார். முதல் இன்னிங்சில் 49 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றிய அவர், 2-வது இன்னிங்சில் 54 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

9 விக்கெட்டுக்கள் கைப்பற்றியதால் ஹேரத் ஐ.சி.சி.யின் தரவரிசையி்ல 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். தற்போது அவர் 749 புள்ளிகளுடன் அந்த இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய வீரர் அஸ்வின் 876 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆண்டர்சன் 875 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திலும், பிராட் 852 புள்ளிகள் பெற்று 3-வது இடத்திலும் உள்ளனர். பேட்டிங்கில் 176 ஓட்டங்கள் சேர்த்த குசால் மெண்டிஸ் 21-வது இடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்து வீரர் டெய்லர் ஜிம்பாப்வே அணிக்கெதிராக 173 ஓட்டங்கள் சேர்த்ததால் 12-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் சொதப்பிய வார்னர், ஜோ பர்ன்ஸ், உஸ்மான் கவாஜா தரவரிசையில் பின்தங்கியுள்ளனர். ஸ்டீவன் ஸ்மித் அரைசதம் அடித்தன்மூலம் பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தில் நீடிக்கிறார். ஜோ ரூட் 2-வது இடத்தில் நீடிக்கிறார்.