வவுனியாவில் நிர்மாணிக்கப்படும் சுற்றுலா மையங்களை பார்வையிட்ட மாகாண சுகாதார அமைச்சர்!!

686

 
வடக்கு மாகாண சபையின் சுற்றுலா மற்றும் கலாசார அபிவிருத்திக்கான நிதியில் வவுனியா மாவட்டத்தில் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் இன்று (02.08) நேரடியாக சென்று பார்வையிட்டார்.

வவுனியா ஆசிகுளம் கிராமசேவகர் பிரிவிலுள்ள கல்நாட்டினகுளம் பகுதியில் அமைக்கப்படுகின்ற மருதநிலம் சுற்றுலா மையம் மற்றும் சிதம்பரபுரம் திருப்பழனி ஆலய யாத்திரிகர் ஓய்வு மண்டபம் மற்றும் கழிவறை கட்டுமானங்களின் முன்னேற்றம் தொடர்பில் களவிஜயத்தை மேற்கொண்டு நிலைமைகளை பார்வையிட்டார்.

சுகாதார அமைச்சரின் வேண்டுகோளுக்கமைய 2015ம் ஆண்டில் மாகாண முதலமைச்சரினால் கல்நாட்டினகுளம் பகுதியில் காணப்படும் இயற்கையான கல்லுமலைப்பகுதியில் மருதமநிலம் எனும் சுற்றுலாமையத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகளுக்கு 2.0 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் ஆரப்பிக்கப்பட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக இவ்வருட நிதியொதுக்கீட்டில் 5.1 மில்லியன் ரூபா செலவில் மேலதிக கட்டுமாணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதே போன்று சிதம்பரபுரம் திருப்பழனி ஆலயத்திற்கு வருகைதரும் யாத்திரிகளின் நன்மைகருதி 1.2 மில்லியன் ரூபா செலவில் யாத்தரிகர் ஓய்வு மண்டபம் மற்றும் கழிவறைகள் அமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 tr-1 tr-3 tr4