வாய்க்காலில் ஆணொருவர் சடலமாக மீட்பு!!

632

Body

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் அல்லிமுல்லை வயல் பகுதி வாய்க்கால் ஒன்றில் இருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நிந்தவூர் முதலாம் பிரிவை சேர்ந்த எல்.அஷ்ரப் (வயது- 42) என்பவரே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவருக்கு அருகில் அவர் பயணித்த சென்ற VBI-2070 எனும் இலக்கமுடைய மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைத்தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

மிகவும் வேகமாக பயணித்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாக்கியதன் காரணமாகவே இவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.