250,000 டொலர்கள் கட்டணத்துடன் விண்வெளிக்கு பயணிகளை அழைத்துச் செல்லும் விமானம்!!

488

VSS_Unity_Roll

விண்வெளிக்கு பயணிகளை அழைத்துச் செல்வதற்கான உரிமத்தை வெர்ஜின் கெலக்ட்டிக் (Virgin Galactic) நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கான அனுமதியை அமெரிக்க விமான நிர்வாகத்துறை வழங்கியுள்ளது.

பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் இவ்விமானத்தில் 6 பேர் பயணிக்கலாம். ஒரு முறை விண்வெளிக்குச் சென்று வர 250,000 டொலர்கள் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

விண்வெளிக்கு செல்வதற்காக இதுவரை 700 பேர் முன்பதிவு செய்துள்ளனர். விண்வெளி வாகனம் மேலும் சில சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், அது அடுத்த ஆண்டு சேவையைத் தொடங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பூமியில் இருந்து 100 கிலோ மீட்டர் உயரம் வரை இந்த விண்வெளி வாகனம் செல்லும். இதற்குள் இருக்கும் பயணிகள் புவி ஈர்ப்பு விசை மாற்றத்தை உணரமுடியும்.