அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் அவஸ்தைப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள்!!

399

epa03468349 Asylum seekers from Sri Lanka inside a detention center in Belawan, Medan, North Sumatra province, Indonesia, 12 November 2012. Indonesian authorities arrested 58 asylum seekers on 06 November after they were stranded on Nias Island while on their way to Christmas Island, Australia. EPA/DEDI SAHPUTRA

அவுஸ்திரேலிய குடியேற்ற மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையின் புதிய தகவலின் அடிப்படையில் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ள சுமார் 1500க்கும் மேற்பட்டோர் தடுப்பு முகாம்களில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் இலங்கையைச் சேர்ந்த 94 பேரும், இந்தியாவைச் சேர்ந்த 65 பேரும் அகதிகளாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நியூசிலாந்தை சேர்ந்த 199 பேரும், ஈரானை சேர்ந்த 175 பேரும், வியட்நாமை சேர்ந்த 142 பேரும் அகதிகளாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை புகலிட கோரிக்கையாளர்கள் பெரும்பாலானோர் சில ஆண்டுகளுக்கு முன் கடல் வழியாக அவுஸ்திரேலியாவை வந்தடைந்தவர்கள்.

மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் தடுப்பிற்கு பின்னர் அவுஸ்திரேலியாவில் வாழ அந்நாட்டு அரசு அனுமதி வழங்குகின்றது என்ற நம்பிக்கையிலேயே இலங்கையைச் சேர்ந்த புகலிட கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவை நோக்கி வருகின்றனர்.

எனினும், சமீப காலமாக கடல் வழியாக வரும் புகலிட கோரிக்கையார்களை அவுஸ்திரேலியா தொடர்ந்து திருப்பி அனுப்பி வருகின்றது.

யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதை காரணம் காட்டி, இலங்கை அகதிகளை பொருளாதார அகதிகளாகவும் அடையாளப்படுத்துகிறது.

இதனால் தமிழ் அகதிகள் அவுஸ்திரேலியாவில் தஞ்சக்கோரிக்கை பெற்றுக்கொள்வதில் பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர்.