கொலைக் குற்றச்சாட்டில் ஒருவருக்கு மரண தண்டனை!!

895

Death

கொலை குற்றச்சாட்டடில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு பாணந்துரை நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.

மொரட்டுவ பிரதேசத்தினை சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு மரணத்தண்டனை விதித்து நீதிபதி விக்ரம களுஹாராச்சி இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

கடந்த 2007ஆம் ஆண்டு மே மாதம் மொரடுவை – கடொலான பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் இந்த மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட மற்றுமொரு சந்தேகநபர் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றிருந்த இடைநடுவில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.