எதிர்வரும் ஒக்டோபர் முதல் இருமடங்கு வேகத்துடன் நாடு முழுவதும் Wifi!!

1628

Wifi

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் 400 இடங்களில் Wifi வசதியை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 5 நிறுவனங்களிடம் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தற்போது 28,000 பேர் மாத்திரமே Wifi வசதிகளை பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

புதிய தொழிநுட்பத்தினூடாக பெற்றுக் கொடுக்கப்படும் Wifi வசதி இருமடங்கு வேகம் கொண்டதாக காணப்படும் எனவும் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.