வவுனியா விக்ஸ் தோட்டத்திற்குள் அத்துமீறி குடியேறினால் சட்டநடவடிக்கை!!

1495

 
வவுனியா இராசேந்திரகுளம் விக்ஸ்காடு பகுதியில் நேற்று முன்தினம் (02.08.2016) சட்டவிரோதமான முறையில் காடுவெட்டி காணி அபகரிக்க முயன்றதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற வவுனியா உதவி மாவட்ட வன அதிகாரி இரா.ரவிராஜ் சட்டவிரோதமான முறையில் வன திணைக்களத்திற்குரிய பகுதியில் குடியேற முயன்றவர்களிடம் தெரிவிக்கையில்..

எதிர்வரும் காலங்களில் இந்த விக்ஸ் மரத்தோட்டத்திற்குள் அத்துமீறி உட்பிரவேசிப்பது அல்லது குடியிருப்பது சட்டத்திற்கு முரணானது என்பதை தெளிவுபடுத்தியதுடன், இப்பகுதியானது வன திணைக்களத்திற்குச் சொந்தமானது எனவே இனந்தெரியாதவர்களினால் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பு முயற்சிகளிலிருந்து பொதுமக்கள் விலகியிருக்குமாறு தெரிவித்ததுடன்
அத்துமீறி உட்பிரவேசித்தால் அவர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து அப்பகுதியில் குடியேற முற்பட்ட 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவ் அறிவித்தலை ஏற்றுக்கொண்டு காணி அபகரிக்கும் முயற்சியை கைவிட்டு திரும்பி சென்றுவிட்டனர்.

image-0-02-01-442fa24727fdafe8d4f68f964eea6954e54e8de536a0f9d57c43917b82abceb4-V image-0-02-01-cd36d0b0507dbc06554ec800d0399d975ff7aa04de3e4d8c58416eae813d9bdd-V